#Ayudha Pooja
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Ayudha Pooja குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களை முன்னிட்டு அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இத்திருநாட்கள் அனைவரின் வாழ்விலும் புதிய நம்பிக்கையையும், வளத்தையும், வெற்றியையும் கொண்டு சேர்க்கட்டும் என வாழ்த்தியுள்ளார்.
ஆயுத பூஜையை முன்னிட்டு பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்புப் பேருந்துகள் இயக்கப் பணிகளை மேற்கொள்ள மேலாண் இயக்குநர்கள், பொது மேலாளர்கள் மற்றும் பல்வேறு நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமித்து கண்காணிப்பு.
ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, பொது மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத் துறையின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் மற்றும் சிறப்புப் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து 15/10/2026 முதல் 18/10/2026 வரையில், 14,963 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பேருந்து நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு சீரான பேருந்து இயக்கம் உறுதி செய்யப்படுகிறது.
பண்டிகை விடுமுறை நாட்களில் தனியார் ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டணம் மற்றும் விதிமீறல்களை கட்டுப்படுத்த சிறப்பு குழுக்கள் அமைப்பு
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களில் (02.10.2026 முதல் 21.10.2026 வரை) தனியார் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் வந்ததையடுத்து, தமிழ்நாடு முழுவதும் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள், விதிமீறும் ஆம்னி பேருந்துகள் மற்றும் சாலை வரி செலுத்தாத பிற மாநில வாகனங்கள் மீது தீவிர சோதனை நடத்தி அபராதம் விதித்து, வாகனங்களை பறிமுதல் செய்து, வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.