TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Employment Generation

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Employment Generation குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

17 நவ., 2026PR #1072

ECLGS 5.0 திட்டத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கூடுதல் கடன் வசதியைப் பெற்று பயன்பெற வேண்டும் - மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மாண்புமிகு அமைச்சர் திரு. பெ.மதன் ராஜா அவர்கள் வேண்டுகோள்

மாண்புமிகு அமைச்சர் திரு. பெ.மதன் ராஜா அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSMEs) ECLGS 5.0 திட்டத்தின் கீழ் கூடுதல் கடன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களும் பயன்பெற மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

12 நவ., 2026PR #1043

மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா, மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் முனைவர் நெ.மரிய வில்சன் ஆகியோர், சிப்காட் பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா, நிதித்துறை அமைச்சர் முனைவர் நெ.மரிய வில்சன் ஆகியோர், பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக சென்னை, மாதவரம், அமுல்லவாயல், கொசப்பூர் மற்றும் மாதூர் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 530 ஏக்கர் நிலத்தை, டிட்கோ, சிப்காட், வருவாய்த் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து களஆய்வு மேற்கொண்டனர்.

26 மே, 2026

திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா மற்றும் மெகா உணவு பூங்காவினை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

தொழில்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், சமச்சீரான வட்டாரத் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் விதமாக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா அவர்கள் இன்று (26.05.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறையில் அமைந்துள்ள சிப்காட் (SIPCOT) தொழிற்பூங்கா மற்றும் மெகா உணவுப் பூங்காவில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.