TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

தொழில் வளர்ச்சி

மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா, மாண்புமிகு நிதித்துறை அமைச்சர் முனைவர் நெ.மரிய வில்சன் ஆகியோர், சிப்காட் பகுதிகளில் களஆய்வு மேற்கொண்டனர்.

மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா, நிதித்துறை அமைச்சர் முனைவர் நெ.மரிய வில்சன் ஆகியோர், பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக சென்னை, மாதவரம், அமுல்லவாயல், கொசப்பூர் மற்றும் மாதூர் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 530 ஏக்கர் நிலத்தை, டிட்கோ, சிப்காட், வருவாய்த் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து களஆய்வு மேற்கொண்டனர்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச. கீர்த்தனா, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு. பெ. மதன் ராஜா, நிதித்துறை அமைச்சர் முனைவர் நெ.மரிய வில்சன் ஆகியோர், பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில், தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக 12.11.2026 அன்று மணலிக்கு அருகிலுள்ள சென்னை, மாதவரம், அமுல்லவாயல், கொசப்பூர் மற்றும் மாதூர் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 530 ஏக்கர் நிலத்தை, டிட்கோ, சிப்காட், வருவாய்த் துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுடன் இணைந்து களஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலம் முன்னதாக அரசால் கையகப்படுத்தப்பட்டு, Aromatic complex அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டு, நிலம் வழங்கப்பட்டது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் மீறப்பட்டதால், 2018-ஆம் ஆண்டில் இந்த நிலம் மீண்டும் அரசால் திரும்பப் பெறப்பட்டு, தொழில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆய்வின் போது, டிட்கோ அலுவலர்கள் தொழில் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தின் தற்போதைய நிலையை விளக்கினர். அதில் குறிப்பாக 530 ஏக்கர் நிலத்தில், சுமார் 240 ஏக்கர் நிலம் மட்டுமே உயர் அழுத்த மின்பாதைகள் (HT lines) இல்லாத பகுதியாகும். மேலும் மீதமுள்ள 230 ஏக்கர் நிலப்பரப்பில் உயர் அழுத்த மின்பாதைகள் செல்கின்றன எனவும் 60 ஏக்கர் நிலப்பரப்பு நீர்நிலையாக (ஏரி) பெருநகர சென்னை மாநகராட்சியின் (GCC) பராமரிப்பில் உள்ளது என தெரிவித்தனர். மேலும் உயர் அழுத்த மின்பாதைகள் செல்லும் 230 ஏக்கர் நிலப்பகுதியில், மாத்தூர் சுங்கச்சாவடிக்கு அருகில், 200 அடி அகல சாலை ஓரத்தில் சுமார் 35 ஏக்கர் நிலம், உயர் அழுத்த மின்பாதைகள் இன்றி காணப்படுகிறது. இந்த இடத்தின் நீளம் சுமார் 1கி.மீ. மற்றும் அகலம் ஒரு முனையில் 100 மீட்டராகவும், மற்றொரு முனையில் 275 மீட்டராகவும் உள்ளது என அலுவலர்கள் கள ஆய்வின் போது தெரிவித்தார்கள்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மணலிக்கு அருகிலுள்ள சுமார் 530 ஏக்கர் நிலத்தில் தொழிற்சாலைகள் அமைத்து பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
  • 2
    மாத்தூர் சுங்கச்சாவடிக்கு அருகில், உயர் அழுத்த மின்பாதைகள் இல்லாத சுமார் 35 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்