#Fishing Boats
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Fishing Boats குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (13.11.2026) தலைமைச் செயலகத்தில், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இயற்கைப் பேரிடர்களால் கடலில் காணாமல்போவது மற்றும் உயிரிழப்பு போன்ற இன்னல்களைச் சந்திக்க நேரிடுவது தொடர்பாகவும், தற்போது வடகிழக்கு பருவமழைக் காலமாக உள்ளதால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளின்போது, கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாகவும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் 3 மீன்பிடி விசைப் படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள், மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் 13.10.2026 அன்று கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் 3 மீன்பிடி விசைப்படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கோரி ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 மீனவர்களையும், 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கக்கோரி, மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 20 தமிழ்நாட்டு மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட 270 மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்கக் கோரி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தொடர்ச்சியான கைதுகள் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.