TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

செய்தி வெளியீடு

மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்தல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (13.11.2026) தலைமைச் செயலகத்தில், மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது இயற்கைப் பேரிடர்களால் கடலில் காணாமல்போவது மற்றும் உயிரிழப்பு போன்ற இன்னல்களைச் சந்திக்க நேரிடுவது தொடர்பாகவும், தற்போது வடகிழக்கு பருவமழைக் காலமாக உள்ளதால், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் ஏற்படக்கூடிய புயல் மற்றும் இயற்கை இடர்பாடுகளின்போது, கடலில் மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது தொடர்பாகவும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் புயல் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளின்போது, மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது. மேலும், மீனவர்கள் மற்றும் மீன்பிடிப் படகுகள் கடலில் இடர்ப்பாடுகளைச் சந்திக்கும் அவசர காலங்களில், மீனவர்கள் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல், கடலில் மீனவர்களின் தகவல் தொடர்புக் கருவிகளை மேம்படுத்துதல், படகு மற்றும் அதன் இயந்திரங்கள் கடலில் செல்லத்தக்க வகையில் இருப்பதை உறுதிசெய்தல், இவை தொடர்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துதல் குறித்தும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது காணாமல் போகும் நேர்வில், கடல்வள சட்ட அமலாக்கப் பிரிவு, கடலோர காவல் குழுமம், இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கப்பற்படை போன்ற பல்வேறு அமைப்புகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையுடன் ஒருங்கிணந்து, விரைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    புயல் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகளின்போது மீனவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தற்பொழுது பின்பற்றப்படும் நடைமுறைகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.
  • 2
    மீனவர்கள் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் கண்டறிவதற்கான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துதல்.
  • 3
    கடலில் மீனவர்களின் தகவல் தொடர்புக் கருவிகளை மேம்படுத்துதல்.
  • 4
    படகுகள் மற்றும் அதன் இயந்திரங்கள் கடலில் செல்லத்தக்க வகையில் இருப்பதை உறுதிசெய்தல்.
  • 5
    மீனவர் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களை முறையாக அமல்படுத்துதல்.
  • 6
    மீனவர்கள் காணாமல் போகும் நேர்வில், கடல்வள சட்ட அமலாக்கப் பிரிவு, கடலோர காவல் குழுமம், இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இந்தியக் கப்பற்படை போன்ற அமைப்புகள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையுடன் ஒருங்கிணந்து விரைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்