TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Flood Relief

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Flood Relief குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 அக்., 2026PR #911

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் இந்த ஆண்டு மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 20 திட்டப்பகுதிகளில் ரூ.2882.62 கோடி மதிப்பீட்டில் 12,648 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்- மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.ப.ராஜ்குமார் அவர்கள் தகவல்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 20 திட்டப்பகுதிகளில் ரூ.2882.62 கோடி செலவில் 12,648 புதிய குடியிருப்புகள் கட்டப்படும் என அறிவித்துள்ளது. சித்ரா நகர் குடும்பங்களுக்கு கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் வீடுகளை ஒதுக்கீடு செய்யும் விழாவில் அமைச்சர் ப.ராஜ்குமார் தலைமை தாங்கினார். மேலும், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பழைய குடியிருப்புகளின் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், வடகிழக்கு பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

18 அக்., 2026PR #871

செய்தி வெளியீடு: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. காலை நேரத்திற்குள் மாநகரில் இயல்பு நிலை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.

21 செப்., 2026PR #709

செய்தி வெளியீடு - வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.