TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Hostels

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Hostels குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 நவ., 2026PR #1082

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.01 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்து, ஆலந்தூரில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் 52 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டடம், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பன்நோக்கு திறந்தவெளி அரங்கம், உள்விளையாட்டரங்கம் போன்ற பல்வேறு கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் 22 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.