TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

கல்வி, உள்கட்டமைப்பு மேம்பாடு

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.01 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்து, ஆலந்தூரில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் 52 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டடம், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பன்நோக்கு திறந்தவெளி அரங்கம், உள்விளையாட்டரங்கம் போன்ற பல்வேறு கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் 22 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.11.2026) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், அரசு தொழில்நுட்பக் கல்லூரி, அரசு கலைக் கல்லூரிகள் ஆகியவற்றில் 52 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டடம், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், பன்நோக்கு திறந்தவெளி அரங்கம், உள்விளையாட்டரங்கம் போன்ற பல்வேறு கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்தார். கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 300 மாணவர்கள் தங்கும் வகையில் ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டடம், திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 8 கூடுதல் வகுப்பறைகள், 12 ஆய்வகங்கள், பன்நோக்கு திறந்தவெளி அரங்கம், கான்கிரீட் சாலை, விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி மேம்பாடு, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள்விளையாட்டரங்கம் மற்றும் சுற்றுச்சுவர் என மொத்தம் 52 கோடியே 1 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். மேலும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் 22 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடம் கட்டும் பணிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    ரூ.52.01 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களைத் திறந்து வைத்தல்.
  • 2
    ஆலந்தூரில் ரூ.22.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டுதல்.
  • 3
    கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்களுக்கான கூடுதல் தங்கும் விடுதிக் கட்டடம் திறப்பு.
  • 4
    திருப்பூர், எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 8 கூடுதல் வகுப்பறைகள், 12 ஆய்வகங்கள், பன்நோக்கு திறந்தவெளி அரங்கம், கான்கிரீட் சாலை, விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி மேம்பாடு திறப்பு.
  • 5
    தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் உள்விளையாட்டரங்கம் மற்றும் சுற்றுச்சுவர் திறப்பு.
  • 6
    செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்