TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Human Resources Management Department

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Human Resources Management Department குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

29 ஜூலை, 2026PR #457

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-1 பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

22 மே, 2026

மனிதவள மேலாண்மைத் துறை திட்டங்கள் குறித்து அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மாண்புமிகு மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு. த. சரத்குமார் தலைமையில் மனிதவள மேலாண்மைத் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பவும், போட்டித்தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கவும், ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்யவும் அமைச்சர் அறிவுறுத்தினார்.