#Manufacturing
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Manufacturing குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர் சந்திப்பு
ஃபோர்டு நிறுவனத்தின் உயர்மட்டக் குழுவினர், தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது, உலகளாவிய திறன் மையங்களை விரிவாக்கம் செய்வது மற்றும் எதிர்கால விரிவாக்கத் திட்டங்கள் குறித்து முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தினர். ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை நினைவுகூர்ந்த முதலமைச்சர், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழுமையாகப் பயன்படுத்தி, உற்பத்தியையும் விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ளக் கேட்டுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் ஹிட்டாச்சி எனர்ஜி விரிவாக்கத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்: 1000 கோடி ரூபாய் முதலீடு, 1000 உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்
முதலமைச்சர் முன்னிலையில், 1000 கோடி ரூபாய் முதலீட்டில் ஹிட்டாச்சி எனர்ஜி நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 1000 உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் அமைக்க தமிழ்நாடு அரசு மற்றும் IN-SPACe நிறுவனத்திற்கிடையே மேற்கொள்ளப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (17.06.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) இடையே தூத்துக்குடி மாவட்டம், அல்லிக்குளத்தில் உருவாக்கப்படவுள்ள விண்வெளி உற்பத்தி தொழிற்பூங்காவில் "விண்வெளி வாகனங்கள் பொதுத் தொழில்நுட்ப வசதி மையம் (CTF)" அமைப்பதற்காக கையெழுத்திடப்பட்ட சிறப்புமிக்க ஒப்பந்தத்தைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.
மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் சென்னை, நந்தனத்தில் தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம் (டான்செம்) மற்றும் தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிமெண்ட் விற்பனையை அதிகரிப்பது மற்றும் மாநிலத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் புதிய முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான உத்திகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
ரெனால்ட் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இன்று (18.5.2026) தலைமைச் செயலகத்தில், ரெனால்ட் குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்துப் பேசினார்கள்.