TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#National Green Tribunal

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட National Green Tribunal குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

7 நவ., 2026PR #1009

தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் -சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல எனத் தெரிவித்தும், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ/நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள், தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைத்திடவும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ / நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.