TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Rainfall

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Rainfall குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

18 அக்., 2026PR #872

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு, மழைநீர் அகற்றம், மரக்கிளைகள் அகற்றம், நிவாரண மையங்கள், சுரங்கப்பாதைகள், மீட்பு உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் குறித்து கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.