#Disaster Preparedness
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Disaster Preparedness குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
பொது வானிலை அறிவிப்பு மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் - "முரசு" புயல் – வானிலை நிலவரம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்கான முன்னெச்சரிக்கை வழிகாட்டுதல்கள்
தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை (TNDRRA), இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் "முரசு" புயலை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தற்போது புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்கிறது. இருப்பினும், அடுத்த சில நாட்களுக்கு வடக்கு தமிழ்நாட்டில் கனமழை, பலத்த சூறைக்காற்று மற்றும் மிகக் கொந்தளிப்பான கடல் நிலை நிலவும். பதற்றமடையத் தேவையில்லை; ஆனால் அனைவரும் விழிப்புடன் இருந்து, எளிய நடைமுறை முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டு, கீழ்க்காணும் பொது வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டும் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (18.10.2026) பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மற்றும் உயர் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினைப் பார்வையிட்டு, மழைநீர் அகற்றம், மரக்கிளைகள் அகற்றம், நிவாரண மையங்கள், சுரங்கப்பாதைகள், மீட்பு உபகரணங்கள் மற்றும் உணவு வழங்கல் குறித்து கேட்டறிந்து, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம்' தொலைநோக்கு ஆவணம் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு அமைச்சர் திரு.N.ஆனந்த் தலைமையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் 11 மாவட்டங்களுக்கான 'வெற்றித் தமிழகம் - தொலைநோக்கு ஆவணம் - செயல்திட்ட முன்னெடுப்பு' மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து 'முதல் மண்டல மாநாடு' நடைபெற்றது.
வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் வடகிழக்குப் பருவமழை மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மலைப்பகுதிகள் மற்றும் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
செய்தி வெளியீடு - வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (21.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.