TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Rainwater Harvesting

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Rainwater Harvesting குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

21 அக்., 2026PR #885

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த "துளி" இலச்சினையைத் திறந்து வைத்து, மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (21.10.2026) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், சென்னை, சேப்பாக்கம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு குறித்த "துளி" இலச்சினையைத் திறந்து வைத்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு மாதிரி இல்லத்தைப் பார்வையிட்டார். பின்னர், மெரினா கடற்கரையில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் உள்ள பகுதிகளில் மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடையே ஏற்படுத்திடும் வகையில் மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, குறும்படத்தைப் பார்வையிட்டார்.