#Rescue Operations
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Rescue Operations குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
செய்தி வெளியீடு: பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் பெய்த அதிகனமழையினைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இரவு முழுவதும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையினை மேற்கொண்டனர். சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர்த் தேக்கமின்றி சீரான போக்குவரத்து நடைபெற்று வருகிறது. காலை நேரத்திற்குள் மாநகரில் இயல்பு நிலை மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேபாளம், காட்மண்டு செல்லும் உறவினர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசின் அலுவலர்கள் (Nodal Officers) குழு காட்மண்டுவில் முகாம்
நேபாளத்தில் போதே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கிட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் அலுவலர்கள் (Nodal Officers) குழு காட்மண்டுவில் முகாமிட்டுள்ளது. இதுவரை 21 பயணிகள் மீட்கப்பட்டு, 84 பயணிகளுக்கான தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.