#Transport Minister
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Transport Minister குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
முதலமைச்சர் உத்தரவின்படி, மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகளை மேம்படுத்துதல், வருவாயை உயர்த்துதல் மற்றும் பேருந்துகளை நவீனமயமாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் விழுப்புரம் மாநகரப் போக்குவரத்து கழகம் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் பை காணாமல் போனது மற்றும் விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிறுத்தாமல் சென்றது குறித்த இரண்டு பொதுமக்கள் புகார்களுக்கு நடவடிக்கை மேற்கொண்டதுடன், விழுப்புரம் பணிமனையிலும் ஆய்வு மேற்கொண்டார்.