#Tribal Welfare
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Tribal Welfare குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகத்தில் (Directorate of Tribal Welfare) துறைசார் நிபுணர்களாக (Subject Matter Experts) மானுடவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குநரகம், பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி, ஆவணப்படுத்தல், கொள்கை உருவாக்கம், திட்ட மதிப்பீடு மற்றும் திறன் மேம்பாடு பணிகளுக்காக மானுடவியலில் துறைசார் நிபுணர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளுக்கு நிதியுதவி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் சிறந்த இலக்கிய படைப்புகளை எழுதிய 11 எழுத்தாளர்களுக்கு தலா ரூ.1,00,000/- நிதி உதவி வழங்கப்படுகிறது.
பழங்குடியின இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி: தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் ஐ.ஆர்.டி கும்மிடிப்பூண்டி இணைந்து நடத்திய திட்டத்தில் 100% வேலைவாய்ப்பு!
பழங்குடியின இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள அரசு சாலைப் போக்குவரத்து நிறுவனம் (IRT) இணைந்து "தொல்குடி தொடுவானம்" திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 16 பழங்குடியின இளைஞர்களுக்கு "கனரக மோட்டார் வாகனம்" (Heavy Motor Vehicle - HMV) ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு, ஓட்டுநர் உரிமத்துடன் பொது வில்லை (PSV-Badge) வெற்றிகரமாக வழங்கப்பட்டுள்ளது.
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்க்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு - பழங்குடியினர் நலத்துறை
2026-2027 ஆம் கல்வி ஆண்டிற்க்கான பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பல்வேறு ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான இணையவழி பொது மாறுதல் கலந்தாய்வு 22.06.2026 மற்றும் 23.06.2026 ஆகிய இரு நாட்கள் நடைபெறும். இணையவழியில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்கள்.
மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் அவர்கள் இன்று 22.05.2026 தலைமைச் செயலகத்தில் அமைச்சராக பதவியேற்பு – செய்தி வெளியீடு
மாண்புமிகு சமூக நீதித் துறை அமைச்சர் அவர்கள் இன்று 22.05.2026 அன்று பதவியேற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினருக்கான நலத்திட்டங்களுக்கு குறிப்பிடத்தக்க நிதியுதவிகளுக்கு ஒப்புதல் அளித்தார். இதில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகப் பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம், கிராம அறிவுசார் மையங்கள் அமைத்தல் மற்றும் மாணவியர் விடுதிகள் கட்டுதல் ஆகியவை அடங்கும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 2025-26 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக தேர்ச்சி - செய்தி வெளியீடு
2025-26 ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மாணக்கர்களின் தேர்ச்சி விகிதம் 91.42 சதவீதமாகவும், இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். மேலும், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 96.66 சதவீத தேர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டை விட மூன்று சதவீதம் அதிகமாகும், இது மாநிலத்தின் மொத்த தேர்ச்சி விகிதமான 94.31 சதவீதத்தினை காட்டிலும் அதிகமாகும்.
அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் - 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம், 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்களை ஆதிதிராவிடர், மதம்மாறிய கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து வரவேற்கிறது.