குறிச்சொல் செய்திகள்
#Water Management
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Water Management குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
24 மே, 2026
மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு குறித்து துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மரு.கே.ஜி.அருண்ராஜ் அவர்கள் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று (24.05.2026) காவிரி, பொன்னியாறு மற்றும் திருமணிமுத்தாறு நதிகள் இணைப்பு திட்டம் குறித்து துறைச்சார்ந்த அலுவலர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர், விவசாய சங்க பிரதிநிதிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
20 மே, 2026
விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், விவசாயிகளின் நலன் கருதி நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல அனுமதி அளிப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.