TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆன்மீக நகர வளர்ச்சி, விவசாயம் மற்றும் நலத்திட்ட அறிவிப்புகள்.

18 ஜூலை, 2026PR #421

தமிழ்நாடு நாள் விழா: மாணவர்களுக்கான போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது

ஜூலை 18, 2026 அன்று சென்னை, தரமணியில் நடைபெற்ற தமிழ்நாடு நாள் விழாவில், அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

25 ஜூன், 2026PR #295

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஜுலை 31ம் தேதிக்குள் விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு.ர. வினோத் அவர்கள் வேண்டுகோள்.

மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள், இயற்கை சீற்றங்கள் மற்றும் எல் நினோ தாக்கத்தால் ஏற்படும் இழப்புகளில் இருந்து பாதுகாக்க, 2026 குறுவை பருவ நெற்பயிர் மற்றும் இதர பயிர்களுக்கு ஜூலை 31, 2026-க்குள் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளை வலியுறுத்தியுள்ளார்.

23 ஜூன், 2026PR #273

சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ. 28 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 விளையாட்டு அரங்கள் மற்றும் மைதானங்களை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா திறந்து வைத்து 5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்

சர்வதேச ஒலிம்பிக் தின விழாவில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ரூ. 28 கோடியே 25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 10 விளையாட்டு அரங்கள் மற்றும் மைதானங்களை மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜூனா திறந்து வைத்து 5 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 13 லட்சத்திற்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்

16 ஜூன், 2026PR #239

மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை, மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. Ν. ஆனந்த் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் சட்டமன்றத் தொகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கல் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

3 ஜூன், 2026PR #159

"பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கத்தில்" பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க ஆர்வமுள்ள, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள்/தொகுப்பு அளவிலான கூட்டமைப்புகள்/தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்/தனிநபர்கள் அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை மானியம் பெற மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு ர.வினோத் அவர்கள் தகவல்

உளுந்து, பாசிப்பயறு, துவரை மற்றும் காராமணி ஆகிய பயறுவகைப் பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கி, பயறு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திடும் நோக்கில் தமிழ்நாட்டில் வேளாண்மைத்துறையின் மூலம் மத்திய மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் "பயறு வகைகளில் தன்னிறைவுக்கான இயக்கம்" 2025-26-ஆம் ஆண்டுமுதல் செயல்படுத்தப்படுகிறது. உற்பத்தியாகும் பயறுவகைகளை மதிப்புக்கூட்டிட ஏதுவாக இத்திட்டத்தில் பயறுவகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க 33 சதவீத மானியமாக அதிகபட்சமாக 25 இலட்சம் ரூபாய் வரை இந்த நிதியாண்டிலும் (2026–27) வழங்கப்பட உள்ளது.

26 மே, 2026

கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் திறப்பு காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்படுவதால், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும், ஆற்றில் குளிக்கவோ அல்லது கால்நடைகளை கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.