Dr M Saikumar
Dr M Saikumar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை சென்னையில் ஆய்வு
தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., அவர்கள், சென்னை மாநகராட்சியின் அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள், ஏரி மற்றும் கால்வாயில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி உள்ளிட்ட பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செப்டம்பர் மாத இறுதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டார்.
உயிர்ம வேளாண்மையில் சிறப்பாகச் செயல்படும் மூன்று உழவர்களுக்கு 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் 2025-2026ஆம் ஆண்டிற்கான சிறந்த உயிர்ம உழவர்க்கான நம்மாழ்வார் விருதுகளை திரு.செ.நல்லசிவம், திரு.அ. சுப்பிரமணியன் மற்றும் திருமதி சாதனா ஆகியோருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.164.64 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் திறந்து வைத்தார்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.8.2026) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் 127 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 36 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவிலும், என மொத்தம் 164 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.