Thiru Raj Mohan
Thiru Raj Mohan தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 23 பத்திரிகையாளர்களுக்கு ரூ.15,000/- மாதந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளையும், பத்திரிகையாளர் நல நிதியுதவியாக 3 பத்திரிகையாளர்களுக்கு ரூ.5,90,000/- காசோலைகளையும் வழங்கினார்.
செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் பத்திரிகையாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ஆணைகள் மற்றும் நல நிதி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (08.10.2026) நடைபெற்றது. மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் அவர்கள் 23 பத்திரிகையாளர்களுக்கு மாதந்திர ஓய்வூதிய ஆணைகளையும், 3 பத்திரிகையாளர்களுக்கு நல நிதி உதவிகளையும் வழங்கினார்.
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்
மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார். இப்பாசறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கியச் சிந்தனையையும் மேம்படுத்த நடத்தப்படுகிறது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளையொட்டி "கல்வியைக் கொண்டாடுவோம்" சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற 48 நபர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி சிறப்பித்தார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சமூக ஊடகப் பிரிவு சார்பில் நடத்தப்பட்ட "கல்வியைக் கொண்டாடுவோம்" சிறப்புப் போட்டிகளில் வெற்றி பெற்ற 48 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விடுதலைப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களின் 109-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் அமைச்சர்கள் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். அன்னாரது பிறந்தநாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.