Vo Chidambaranar
Vo Chidambaranar தொடர்பான திட்டங்கள், விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீடுகளின் தொகுப்பு.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும், அவர் சிறையில் இழுத்த மரச்செக்கிற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
"கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்திய சுதந்திரப் போராட்டம், சுதேசி இயக்கம் மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்கான அவரது பங்களிப்புகளைப் பாராட்டி புகழஞ்சலி செலுத்தினார்.