TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

TN SHORTS
பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணம்

வியட்நாம் நாட்டில் நிகழ்ந்த சுற்றுலா படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தும், விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிட உத்தரவிட்டும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.

வியட்நாம் படகு விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனது துயரத்தை வெளிப்படுத்தினார். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் சடலங்களை கொண்டுவருதல் உள்ளிட்ட அனைத்து நிவாரணப் பணிகளையும் மாநில மற்றும் மத்திய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்தரவிட்டார்.

மாவட்டங்கள்சென்னை
முக்கிய நபர்கள்Thiru. S. Joseph Vijay

விரிவான சுருக்கம்

வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தார். இப்படகு விபத்தில் சிக்கிய தமிழர்களின் விவரங்களைப் பெற்று அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை செய்திடும் வகையில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இவ்விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிட இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குதல்.
  • 2
    தமிழ்நாடு அரசு அதிகாரிகள், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லம், இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் வியட்நாமில் உள்ள இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல்.
  • 3
    பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை இந்தியத் தூதரக உயர் அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து வழங்குதல்.
  • 4
    உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவில் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவருவதற்கு இந்தியத் தூதரகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
  • 5
    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தல்.

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்