தியாகிகள் தினத்தை முன்னிட்டு தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
விரிவான சுருக்கம்
தியாகிகள் தினத்தை முன்னிட்டு, இன்று (17.7.2026) சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளின் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். தியாகி ஆர்யாவின் இயற்பெயர் பாஷ்யம். தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள சேரன்குளத்தில் 1907-ஆம் ஆண்டு பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அதிக அக்கறை கொண்டவராகத் திகழ்ந்தார். நீடாமங்கலத்தில் நடைபெற்ற 'சைமனே திரும்பிப் போ' போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். மேலும், சென்னை தலைமைச் செயலகத்தில் யூனியன் ஜாக்கை இறக்கி விட்டு, இந்திய தேசியக் கொடியை ஏற்றிய மாவீரர் இவரே. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாகவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இவரால் வரையப்பட்டவை. தியாகி சங்கரலிங்கனார் அவர்கள் விருதுநகரில் உள்ள மண்மலைமேடு கிராமத்தில் 1895-ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். 1914-ஆம் ஆண்டு பெண் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட சங்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார், கதர் இயக்கத்திலும் பணியாற்றினார். 1917-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து திருச்சியில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டமைக்காக 6 மாதம் சிறைத் தண்டனைப் பெற்றார். 'தமிழ்நாடு' எனப் பெயரிட வேண்டுமெனக் கோரி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார். தியாகி செண்பகராமன் அவர்கள் திருவனந்தபுரத்தில் 15.9.1891 அன்று பிறந்தார். 'ஜெய்ஹிந்த்’ எனும் கோஷத்தை முழங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் உருவாக்கிய இந்திய தேசிய ராணுவத்திற்கு முன்னோடியாக இருந்த இந்திய தேசியத் தொண்டர் படையை உருவாக்கியவர். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள தியாகிகள் மணிமண்டபம் 2.10.1998 அன்று திறந்து வைக்கப்பட்டது. தியாகி ஆர்யா (எ) பாஷ்யம், தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் மார்பளவுச் சிலைகள் 17.7.1999 அன்றும், தியாகி செண்பகராமன் அவர்களின் திருவுருவச் சிலை 17.7.2008 அன்றும் திறந்து வைக்கப்பட்டது. ஜூலை 17-ஆம் தேதி தியாகிகள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1ஜூலை 17-ஆம் தேதி தியாகிகள் தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும்
- 2தியாகி சங்கரலிங்கனார், தியாகி ஆர்யா (என்கிற) பாஷ்யம், தியாகி செண்பகராமன் ஆகிய தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது