மாண்புமிகு அமைச்சர் ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் சமூக உரையாடல் மற்றும் பணியிட ஒத்துழைப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை துவக்கி வைத்தார்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சார்பில், "சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் சென்னையில் துவக்கி வைத்தார்.
விரிவான சுருக்கம்
இன்று (27.07.2026) சென்னையில், மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) சார்பில், "சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்" குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசியபோது மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மாண்புமிகு முதல்வர் சார்பாக திருமதி. மியாமோட்டோ மிச்சிகோ, திருமதி. பல்லவி மான்சிங், அரசு அலுவலர்கள் மற்றும் இப்பயிற்சியின் பங்கேற்பாளர்களை உளமார வரவேற்றார். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாய் விளங்கும் ஒவ்வொரு தொழிலாளரின் குரலாக நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும், மாண்புமிகு தமிழக முதல்வரின் தலைமையில், ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பாகவும், மதிப்புடனும் நடத்தப்படுவதையும், முன்னேறும் வாய்ப்பைப் பெறுவதையும் உறுதி செய்வதற்கான வெற்றி தமிழகத்தினை உருவாக்கிடும் நோக்கில் நாம் உறுதியாக செயல்பட்டு வருகிறோம் என்றும் பேசினார். இந்தியாவின் தொழில் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், தொழிலாளர் நலனிலும் நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழும் மாநிலமாக தமிழ்நாட்டை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மனிதவள துறை வல்லுநர்கள், நலப்பணி அதிகாரிகள், தொழிலாளர் சட்டங்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறிப்பாக மின்னணுவியல் உற்பத்தித் துறைகள் மற்றும் பிற துறைகளைச் சார்ந்தவர்கள் பங்குபெற்றனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் திரு. கொ. வீரராகவ ராவ் இ.ஆ.ப., தொழிலாளர் ஆணையர் முனைவர் மா.வள்ளலார் இ.ஆ.ப, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக இயக்குநர் திரு. செ.ஆனந்த், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குநர் திருமதி. மியாமோட்டோ மிச்சிக்கோ, தேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. பல்லவி மான்சிங், முதுநிலை நிகழ்ச்சி அலுவலர் திருமதி. திவ்யா வர்மா, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலைய இயக்குநர் திருமதி. ஆர்.செந்தில் குமாரி, இணை இயக்குநர்கள் திரு.பெ.சுப்ரமணியன் மற்றும் திரு. மு.வி. கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
முக்கிய அறிவிப்புகள்
- 1'சமூக உரையாடல், பணியிட ஒத்துழைப்பு மற்றும் குறைதீர் நடைமுறைகள்' குறித்த ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கு துவக்கம்.
- 2தமிழ்நாட்டில் ஒவ்வொரு தொழிலாளரும் பாதுகாப்பாகவும், மதிப்புடனும் நடத்தப்படுவதையும், முன்னேறும் வாய்ப்பைப் பெறுவதையும் உறுதி செய்வதற்கான உறுதிப்பாடு.
- 3தொழில் வளர்ச்சியிலும், தொழிலாளர் நலனிலும் தமிழ்நாட்டை முன்மாதிரி மாநிலமாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது.