அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகளை வழங்கினார். 136 இளநிலை பயிற்சி அலுவலர்கள் உதவி பயிற்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
விரிவான சுருக்கம்
பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பான முடிவுகளை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் மேற்கொள்ளும் நோக்கில், அரசு முன்னெடுத்துள்ள வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்க, பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசால் 30.07.2026 அன்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்ககத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் பயிற்றுநர்களுக்கு முதுநிலையையும், விருப்பத்தையும் அடிப்படையாகக் கொண்டு, கணினி வழியாக கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்வு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், 136 இளநிலை பயிற்சி அலுவலர்கள் உதவி பயிற்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றனர். பதவி உயர்வுக்கான ஆணைகள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜா. முகமது பர்வேஸ் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அரசுச் செயலாளர் திரு. கொ. வீர ராகவ ராவ், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப., மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கு பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன.
- 2136 இளநிலை பயிற்சி அலுவலர்கள் உதவி பயிற்சி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றனர்.
- 3கணினி வழியாக கலந்தாய்வு மூலம் பதவி உயர்வு ஆணை வழங்கும் நிகழ்வு முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.