மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
போக்குவரத்துத் துறை செயலாளர் திரு. இல. நிர்மல் ராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
விரிவான சுருக்கம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் 26 மண்டலங்கள் மற்றும் 317 பணிமனைகளின் வாயிலாக சுமார் 21,515 பேருந்துகளை இயக்கி, தினசரி சுமார் 2.02 கோடி பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையினை பூர்த்தி செய்து வரும் பொது சேவை நிறுவனமாகும். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கிணங்க, மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் தலைமையில் இன்று (04.08.2026), பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்வது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் அதனை உறுதி செய்யும் விதத்தில் ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகள் தயார் செய்யும் போது விதிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வாறு, ஒப்பந்தப் புள்ளி விதிமுறைகளை சீரமைத்து அதன் மூலம் தகுதியுள்ள நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்கவும் குறைந்த விலையில் தரமான பேருந்துகளை கொள்முதல் செய்ய தகுந்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பேருந்துகளை விரைவாக கொள்முதல் செய்து சிறந்த போக்குவரத்து சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு போக்குவரத்துத் துறை செயலாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார். மேலும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கொள்முதல் ஆணைப்படி பேருந்துகளை விரைவில் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட பேருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆ.ப., துறை சார்ந்த உயர் அலுவலர்கள் மற்றும் நிறுவனங்களை சார்ந்தோர் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1பேருந்து தயாரிக்கும் நிறுவனங்களுடன் பேருந்து கொள்முதல், குறிப்பாக மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
- 2மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் அதிக அளவிலான தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
- 3பேருந்து கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி நிபந்தனைகளை வகுப்பது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
- 4தகுதியுள்ள நிறுவனங்கள் அதிக அளவில் பங்கேற்கவும் குறைந்த விலையில் தரமான பேருந்துகளை கொள்முதல் செய்யவும் ஒப்பந்தப் புள்ளி விதிமுறைகளை சீரமைக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
- 5போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கு பேருந்துகளை விரைவாக கொள்முதல் செய்து சிறந்த போக்குவரத்து சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அறிவுரை வழங்கப்பட்டது.
- 6ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள கொள்முதல் ஆணைப்படி பேருந்துகளை விரைவில் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கிட சம்பந்தப்பட்ட பேருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.