ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு
ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
விரிவான சுருக்கம்
ஒன்றிய அரசு, தொகுதிகளை மறுவரையறை செய்ய உத்தேசித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில், ஒன்றிய அரசால் மேற்கொள்ள உத்தேசித்துக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் மற்றும் அதனால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் தாக்கங்கள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) கலந்தாய்வுக் கூட்டம் 8.8.2026 (சனிக்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு, சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கத்தின் கூட்டரங்கில் (3-ஆம் தளம்) நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கான அழைப்பிதழ் புதுதில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தின் மூலம் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
முக்கிய அறிவிப்புகள்
- 1ஒன்றிய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள தொகுதி மறுவரையறைப் பணிகள் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும்.
- 2கூட்டத்திற்கு மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமை தாங்குவார்.
- 3கூட்டம் 8.8.2026 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை, சேப்பாக்கம், கலைவாணர் அரங்கில் நடைபெறும்.
- 4தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன.