TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

நினைவேந்தல்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த் உள்ளிட்ட அமைச்சர்கள் சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும், அவர் சிறையில் இழுத்த மரச்செக்கிற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

விரிவான சுருக்கம்

2026 செப்டம்பர் 5 அன்று, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155வது பிறந்தநாள் தமிழ்நாடு அரசின் சார்பில் கொண்டாடப்பட்டது. சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என்.ஆனந்த், மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் கோ.க. அருண்ராஜ், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.எஸ். ராஜேஷ்குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். மேலும், வ.உ.சிதம்பரனார் சிறையில் இழுத்த மரச்செக்கிற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. வ.உ.சிதம்பரனார் 1872 செப்டம்பர் 5 அன்று தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாதன் பிள்ளை – பரமாயி அம்மையார் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி மற்றும் திருச்சியில் கல்வி பயின்று வழக்கறிஞர் ஆனார். சமூக சேவையிலும் அரசியல் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, தாய் நாட்டின் விடுதலைக்காகப் பாலகங்காதர திலகரை குருவாக ஏற்று, "சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார். இதனால் "கப்பலோட்டிய தமிழன்" எனப் பெயர் பெற்றார். சுதந்திரப் போராட்ட நடவடிக்கைகளுக்காக ஆங்கிலேயர்களால் 1908ஆம் ஆண்டு கோவை சிறையில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, செக்கிழுக்க வைக்கப்பட்டார். தமிழ்மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக பல அரிய நூல்களையும், சுயசரிதையையும் கவிதை வடிவில் எழுதியுள்ளார். தமிழ்நாடு அரசு 1975 முதல் 1976 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட 4 கப்பல் தளங்களுக்கு வ.உ.சிதம்பரனார் அவர்களின் பெயரைச் சூட்டியதுடன், அவர் எழுதிய 16 நூல்களையும் அரசுடைமையாக்கியது. அவரது பிறந்தநாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.எம். அருள் பிரகாசம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.அ.அருண் தம்புராஜ், இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 155ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்.
  • 2
    அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலை மற்றும் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
  • 3
    அவர் சிறையில் இழுத்த மரச்செக்கிற்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.
  • 4
    1975 முதல் 1976 ஆம் ஆண்டு வரை தூத்துக்குடியில் கட்டி முடிக்கப்பட்ட 4 கப்பல் தளங்களுக்கு செக்கிழுத்த செம்மல் வ.உ.சி அவர்களின் பெயர் சூட்டப்பட்டது.
  • 5
    தமிழ்நாடு அரசால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய 16 நூல்களும் அரசுடைமையாக்கப்பட்டது.
  • 6
    வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்