பொங்கல் 2027 மற்றும் தீபாவளி 2026 வேட்டி, சேலை வழங்கும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில், பொங்கல் 2027 மற்றும் தீபாவளி 2026 பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் திரு.ம.விஜய் பாலாஜி அவர்கள் தலைமையில் இன்று (23.09.2026) தலைமைச் செயலகத்தில் வேட்டி, சேலை வழங்கும் திட்டம்-பொங்கல் 2027 மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்டப் பயனாளிகளுக்கு தீபாவளி 2026 பண்டிகைக்கு வேட்டி, சேலை வழங்குதல் ஆகியவற்றின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நூல் கொள்முதல் மற்றும் வேட்டி, சேலை உற்பத்தி முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. மேலும், குறித்த காலத்திற்குள் உற்பத்தியினை நிறைவு செய்ய ஏதுவாக கூடுதல் தறிகளை இயக்கவும், நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டி, சேலை உற்பத்தி செய்யவும், டிசம்பர் 2026-க்குள் வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் பணிகளை நிறைவு செய்து பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்குமாறு மாண்புமிகு கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை செயலாளர் திருமதி ஆர்.லில்லி, இ.ஆ.ப., துணிநூல் துறை ஆணையர் திருமதி வி.ஷோபனா, இ.ஆ.ப., கைத்தறித் துறை இயக்குநர் திருமதி பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., மற்றும் கைத்தறித் துறை, துணிநூல் துறை, கோ-ஆப்டெக்ஸ் நிறுவன உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1நூல் கொள்முதல் மற்றும் வேட்டி, சேலை உற்பத்தி முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
- 2குறித்த காலத்திற்குள் உற்பத்தியினை நிறைவு செய்ய ஏதுவாக கூடுதல் தறிகளை இயக்க அறிவுறுத்தப்பட்டது.
- 3நிர்ணயிக்கப்பட்ட தரத்திலான வேட்டி, சேலை உற்பத்தி செய்ய அறிவுறுத்தப்பட்டது.
- 4டிசம்பர் 2026-க்குள் வேட்டி, சேலை உற்பத்தி மற்றும் கொள்முதல் பணிகளை நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
- 5பொங்கல் பண்டிகைக்கு முன்னர் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.