TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

கல்வி, உயர்கல்வி

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மாமல்லபுரம், அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பு 2026-2027-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது.

கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் 2026-2027 கல்வி ஆண்டு முதல் முதுகலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்பட உள்ளன.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி, தற்போது இளங்கலை பட்டப்படிப்புகளான B.Tech (மரபு கட்டடக்கலை), BFA (மரபு வண்ணக்கலை), மற்றும் BFA (மரபு சிற்பக்கலை - சுதை, கல், மரம், உலோகம்) ஆகியவற்றை பயிற்றுவித்து வருகிறது. இளைய சமுதாயத்தினர் தமிழகத்தின் தொன்மையான மரபு கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையை கற்று உலகளவில் நமது தமிழகத்தின் பாரம்பரிய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையை வெளிப்படுத்தும் வகையிலும், மாணவர்களின் நலன் மற்றும் வேலை வாய்ப்பு கருதியும், 2026-2027-ஆம் கல்வி ஆண்டு முதல் இரண்டாண்டு முதுகலைப் பட்டப்படிப்புகளை (M.Tech மற்றும் MFA) தொடங்க அரசு ஆணையிட்டுள்ளது. மரபு கட்டடக்கலை (M.Tech), மரபு வண்ணம் (MFA) மற்றும் மரபு சிற்பக்கலை (MFA) (கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோகச்சிற்பம்) ஆகிய பிரிவுகளில் முதுகலைப் படிப்புகள் வழங்கப்படும். இப்படிப்பில் சேர தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சேருவதற்கான உயர் வயது வரம்பு இல்லை. தகுதி வாய்ந்த மாணவர்கள் கலை பண்பாட்டுத்துறையின் www.artandculture.tn.gov.in இணையதள முகவரியில் 14.10.2026 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம். இதர விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இச்செய்தி குறிப்பினை கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் திருமதி.மகேஸ்வரி ரவிக்குமார், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மாமல்லபுரம் அரசினர் கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில் 2026-2027 கல்வி ஆண்டு முதல் முதுகலைப் பட்டப்படிப்புகள் தொடங்கப்படும்.
  • 2
    புதிய முதுகலைப் படிப்புகளில் மரபு கட்டடக்கலை (M.Tech), மரபு வண்ணம் (MFA), மற்றும் மரபு சிற்பக்கலை (MFA) (கற்சிற்பம், சுதைச்சிற்பம், மரச்சிற்பம், உலோகச்சிற்பம்) ஆகியவை அடங்கும்.
  • 3
    தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்; வயது வரம்பு இல்லை.
  • 4
    இப்ப படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் www.artandculture.tn.gov.in இணையதளத்தில் 14.10.2026 வரை சமர்ப்பிக்கலாம்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்