TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

கல்வி, இலக்கியம், மொழி வளர்ச்சி

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார்

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார். இப்பாசறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கியச் சிந்தனையையும் மேம்படுத்த நடத்தப்படுகிறது.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" நிகழ்ச்சியை தொடங்கி வைத்து விழாப் பேருரையாற்றினார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கியச் சிந்தனையையும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும், தமிழ் இலக்கியங்களை மதிப்பெண்களுக்காக மட்டுமே மனப்பாடம் செய்தால் போதும் என்கிற எண்ணத்தை மாற்றி மாணவர்களை பண்படுத்தவும் ஏற்றமொழி தமிழ் என்பதை கல்லூரி மாணவர்கள் அறியும் வண்ணம் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இன்று (25.09.2026) நடைபெற்ற இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியில் "இளந்தமிழும் இளைய தலைமுறையும்" என்ற தலைப்பில் தமிழ்மாமணி மதுரை திரு.வெ. இராமகிருஷ்ணன் அவர்களும், "வாழ்வியலும் இலக்கியமும்" என்ற தலைப்பில் வழக்கறிஞர் திரு.அ.க. இராஜாராமன் அவர்களும், "வெற்றிக்களம் கண்ட வீரத்தமிழ்ப்பெண்கள்" என்ற தலைப்பில் முனைவர் வெ. ஸ்ரீலதா அவர்களும், "தமிழிலக்கியத்தில் அடையாள மீட்டுருவாக்கம்" என்ற தலைப்பில் எழுத்தாளர் திரு.ஷாலின் மரிய லாரன்ஸ் அவர்களும், "பாதுகாப்பான செய்யறிவு (AI) சமூகம் அமைப்பது எப்படி" என்ற தலைப்பில் திரு.சைபர் சிம்மன் அவர்களும், "சங்ககாலத்தில் வாழ்வியல் கோட்பாடுகள்" என்ற தலைப்பில் திருமதி அனுகிரகா ஆதிபகவன் அவர்களும் உரையாற்றினர். பல்வேறு கல்லூரிகளிலிருந்து கலந்து கொண்ட 100 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு. வே. ராஜாராமன் இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களால் "இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை" தொடங்கி வைக்கப்பட்டது.
  • 2
    இப்பாசறை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களிடையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தையும் இலக்கியச் சிந்தனையையும் மேம்படுத்தவும், தன்னம்பிக்கையை ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது.
  • 3
    இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
  • 4
    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்புகளில் வல்லுநர்கள் உரையாற்றினர்.
  • 5
    பல்வேறு கல்லூரிகளிலிருந்து 100 மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்