TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

நிவாரணம் மற்றும் உதவி

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அச்சங்குளம் கிராமத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

விரிவான சுருக்கம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. மோகன் என்பவரின் குழந்தைகள் நிறைமதி (வயது 9) மற்றும் பாலபிரணவ் (வயது 6) ஆகியோர் இன்று (30.09.2026) காலை அவர்களது வீட்டிற்கு எதிரே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தகரக் கொட்டகை அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, மின்வயர் அறுந்து கிடந்த தகரக் கொட்டகையைத் தொட்டதால் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இந்த செய்தியை அறிந்த மாண்புமிகு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்ததோடு, உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்