TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

செய்தி வெளியீடு

நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது.

இன்று (05.10.2026) நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

விரிவான சுருக்கம்

இன்று (05.10.2026) தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு.ககன்தீப் சிங் பேடி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடவும், 1 இலட்சம் வண்டல் சேகரிப்புத் தொட்டிகள் தூர்வாரப்பட்டு, இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால், மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளில் தனி கவனம் செலுத்தி முடித்திட வேண்டும். பணிகள் முடிவடையாத இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை அருகிலுள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களுக்கு செலுத்தி அகற்றிட வேண்டும். மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நீர்வழிக் கால்வாய்கள், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் ஏரிகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரி அகற்றிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்கும் பணியினை விரைந்து முடித்திடவும், வெளியில் தெரியும் மின் கேபிள்களை நிலத்திற்குள் பதித்திடவும், மின்சாரம் தாக்கி எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொண்டு உறுதி செய்திடவும் உத்தரவிடப்பட்டது. இரயில்வேக்கு சொந்தமான 28 இரயில்வே சிறு பாலங்கள் பகுதியில் தூர்வாரும் பணியினை முழுமையாக முடித்திட வேண்டும். மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட 219 இடங்களிலும் உடனடியாக மழைநீரை வெளியேற்றும் வகையில் மொத்தம் 1320 மோட்டார் பம்புகள தயார் நிலையில் வைத்திட வேண்டும். 24 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர்த் தேக்கத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 65 ஆயிரம் ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளன. மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வகை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். 215 நிவாரண மையங்கள், 116 சமையல் கூடங்கள் அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளதை மீண்டும் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும். 36 மாநகராட்சி படகுகள் மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைப்புடன் 275 படகுகள் மற்றும் அதனை இயக்குபவர்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களது சேவையினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேரிடர் மேலாண்மைப் பணிகளையும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் திரு.த.ஆனந்த், இ.ஆ.ப. மற்றும் மண்டல அளவிலான கண்காணிப்பு அலுவலர்கள், மாநகராட்சி, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, இரயில்வே, மின்சாரத் துறை, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் உள்ளிட்ட சேவைத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்.
  • 2
    மழைநீர் வடிகால் மற்றும் வண்டல் சேகரிப்புத் தொட்டிகளில் தூர்வாரும் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்; முதற்கட்டமாக சுமார் 1 இலட்சம் வண்டல் சேகரிப்புத் தொட்டிகள் தூர்வாரப்பட்டு, தற்போது இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • 3
    மழைநீர் வடிகால் இணைப்புப் பணிகளில் தனி கவனம் செலுத்தி முடித்திட வேண்டும்.
  • 4
    இப்பணிகள் முடிவடையாத இடங்களில் தண்ணீர் தேங்காதவாறு மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை அருகிலுள்ள மழைநீர் வடிகால் மற்றும் கால்வாய்களுக்கு செலுத்தி அகற்றிட வேண்டும்.
  • 5
    மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து நீர்வழிக் கால்வாய்கள், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட ஆறுகள் மற்றும் ஏரிகளில் ஆகாயத்தாமரைகளை அகற்றி வண்டல்கள் தூர்வாரி அகற்றிட வேண்டும்.
  • 6
    தாழ்வான பகுதிகளில் உள்ள மின் பெட்டிகளை உயர்த்தி வைக்கும் பணியினை விரைந்து முடித்திட வேண்டும்.
  • 7
    வெளியில் தெரியும் மின் கேபிள்களை நிலத்திற்குள் பதித்திட வேண்டும். மின்சாரம் தாக்கி எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொண்டு உறுதி செய்திட வேண்டும்.
  • 8
    இரயில்வேக்கு சொந்தமான 28 இரயில்வே சிறு பாலங்கள் பகுதியில் தூர்வாரும் பணியினை முழுமையாக முடித்திட வேண்டும்.
  • 9
    மழைநீர் தேங்கும் இடங்களாக கண்டறியப்பட்ட 219 இடங்களிலும் உடனடியாக மழைநீரை வெளியேறும் வகையில் மோட்டார் பம்புகள தயார் நிலையில் வைத்திட வேண்டும்; மொத்தம் 1320 மோட்டார்கள் உள்ளன.
  • 10
    24 சுரங்கப்பாதைகளிலும் மழைநீர்த் தேக்கத்தினால் போக்குவரத்து பாதிக்கப்படாதவாறு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
  • 11
    65 ஆயிரம் ஆபத்தான விழும் நிலையில் உள்ள மரக்கிளைகள் கத்தரித்து அகற்றப்பட்டுள்ளன; மரக்கிளைகள் அகற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து வகை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் தயார்நிலையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.
  • 12
    215 நிவாரண மையங்கள், 116 சமையல் கூடங்கள் அனைத்து வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளதை மீண்டும் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.
  • 13
    36 மாநகராட்சி படகுகள் மற்றும் மீன்வளத்துறை ஒருங்கிணைப்புடன் 275 படகுகள் மற்றும் அதனை இயக்குபவர்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
  • 14
    5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களது சேவையினை உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • 15
    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பேரிடர் மேலாண்மைப் பணிகளையும் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்