TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

திறன் மேம்பாடு, பாராட்டு, விருதுகள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்றவர்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு ரூ.49 இலட்சத்திற்கான ஊக்கத்தொகையை வழங்கிப் பாராட்டினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.10.2026) தலைமைச் செயலகத்தில், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு 49 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.

விரிவான சுருக்கம்

சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 48-வது உலகத் திறன் போட்டிகளில் 68 நாடுகள் பங்கேற்றன. இதில் இந்தியா 6 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 20 சிறப்புத் தகுதிப் பதக்கங்களை (Medal for Excellence) வென்று 10-வது இடத்தைப் பிடித்தது. மொத்தம் 63 திறன் பிரிவுகளில் களம் கண்ட இந்திய அணியில் 70 நபர்களில், தமிழ்நாட்டிலிருந்து 12 நபர்கள் பங்கேற்றனர். இவர்களில் 5 நபர்கள் சர்வதேச அளவில் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர். இப்போட்டிகளில் Dental Prosthetics பிரிவில் திரு. ஜா. முகமது சலாம் வெள்ளிப் பதக்கமும், Intelligent Security Technology பிரிவில் திரு. கா.பா. ராகுல் அவர்களும், Mobile Applications Development பிரிவில் திரு. சு.வி. அர்ஜுன் அவர்களும், Plastering and Drywall Systems பிரிவில் திரு. ம. சுரேந்திரன் அவர்களும், Jewellery பிரிவில் திரு. ஜாய் தாஸ் அவர்களும் சிறப்புத் தகுதிப் பதக்கங்களை (Medals for Excellence) வென்றுள்ளனர். இச்சாதனைகள், திறன் மேம்பாட்டில் தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன் ஆற்றலை, சர்வதேசத் தரத்திற்கு இணையாக உயர்த்த அரசு கொண்டுள்ள அர்ப்பணிப்பைப் பறைசாற்றுகின்றன. இந்த உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்களைச் சிறப்பிக்கும் வகையில், வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ஜா. முகமது சலாம் அவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற திரு. கா.பா. ராகுல், திரு. சு.வி. அர்ஜுன், திரு. ம. சுரேந்திரன், திரு. ஜாய் தாஸ் ஆகிய 4 நபர்களுக்குத் தலா 5 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை, போட்டிகளில் பங்கேற்ற திரு. க.மி. சுரேஷ் குமார், திரு. கி. கோகுலகண்ணன், திரு. பூ.ர. முகமது மபாஜ், திரு. சு. அஸ்வின், திரு. த. ரோஹித், செல்வி தனுஸ்ரீ மகேஷ், திரு. ஆ. மோகன்ராஜ் ஆகிய 7 நபர்களுக்குத் தலா 2 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை என மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு 49 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கிப் பாராட்டினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மற்றும் கல்லூரிகளின் முதல்வர்கள் தங்களது மாணவ, மாணவியர்களிடையே இத்திறன் போட்டிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். உலகத் திறன் போட்டிகளில் பங்கேற்பதற்கு, முதலில் தமிழ்நாடு மாநில அளவில் பல்வேறு நிலைகளில் நடைபெறும் தமிழ்நாடு திறன் போட்டிகளில் வெற்றி பெற்று, பின்னர் தென் மண்டல அளவிலான திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்று, தேசிய அளவிலான திறன் போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்க வேண்டும். உலகத் திறன் போட்டிகள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் உதவி எண்கள் 9962220527 மற்றும் 9962220528 ஆகியவற்றைத் தொடர்பு கொண்டும், www.skilldevelopment.tn.gov.in/tnskills/ என்ற இணையதளம் மூலமாகவும் அறியலாம். இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், இ.ஆ.ப., சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை செயலாளர் திருமதி சோ. மதுமதி, இ.ஆ.ப., தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி கவிதா ராமு, இ.ஆ.ப. மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். உலகத் திறன் போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளவில் 64 திறன் பிரிவுகளில் நடத்தப்படுகிறது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற மற்றும் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 போட்டியாளர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் ரூ.49 இலட்சம் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.
  • 2
    வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ஜா. முகமது சலாம் அவர்களுக்கு 15 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை.
  • 3
    சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை.
  • 4
    போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகை.
  • 5
    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் தலைவர்களுக்கு மாணவ, மாணவியர்களை திறன் போட்டிகளில் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டுகோள் விடுத்தார்.
  • 6
    உலகத் திறன் போட்டிகள் குறித்த விவரங்களைத் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் உதவி எண்கள் மற்றும் இணையதளம் மூலம் அறியலாம்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்