குறிச்சொல் செய்திகள்
#Shanghai
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Shanghai குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
27 அக்., 2026PR #923
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தவர்கள் மற்றும் போட்டிகளில் பங்கேற்றவர்கள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு ரூ.49 இலட்சத்திற்கான ஊக்கத்தொகையை வழங்கிப் பாராட்டினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (27.10.2026) தலைமைச் செயலகத்தில், சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலகத் திறன் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஒருவருக்கும், சிறப்புத் தகுதிப் பதக்கங்களை வென்ற 4 நபர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்ற 7 நபர்களுக்கும் என தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 12 போட்டியாளர்களுக்கு 49 இலட்சம் ரூபாய் ஊக்கத்தொகைக்கான காசோலைகளை வழங்கிப் பாராட்டினார்.