TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

இரங்கல் மற்றும் நிதியுதவி, பேரிடர் நிவாரணம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் சமுத்திரம் பெரிய ஏரியில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து, தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.

விரிவான சுருக்கம்

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், ஆணாய்பிறந்தான் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பெண் குழந்தைகள் காப்பகத்தின் செவிலியர் செல்வி தேன்மொழி (வயது 22) மற்றும் அக்காப்பகத்தில் தங்கியிருந்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிறுமிகள் செல்வி விஜயலட்சுமி (வயது 16), த/பெ. வெங்கடேஷ், செல்வி அல்லி (வயது 14), த/பெ. வெங்கடேஷ், செல்வி பூமிகா (வயது 13), த/பெ. வெங்கடேஷ் மற்றும் நெடுங்கம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வி வள்ளியம்மாள் (வயது 16), த/பெ. சேகர் ஆகியோர் நேற்று (09.11.2026) காப்பகத்தின் பின்புறமுள்ள சமுத்திரம் கிராம பெரிய ஏரியில் குளிப்பதற்காகச் சென்றபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்தல்.
  • 2
    உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்குதல்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்