#Chief Minister
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Chief Minister குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
முதலமைச்சர் எரிசக்தித் துறை செயல்பாடுகள் மற்றும் எதிர்காலக் கட்டமைப்பு திட்டங்களை ஆய்வு செய்தார்
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் எரிசக்தித் துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் அதன் துணை நிறுவனங்களின் செயல்பாடுகள், எதிர்காலக் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், மற்றும் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் போன்ற முக்கிய நலத்திட்டங்களின் செயலாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ரெனால்ட் குழுமத்தின் தலைமை நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இன்று (18.5.2026) தலைமைச் செயலகத்தில், ரெனால்ட் குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் குழு சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை ராம்கோ குழுமத்தின் உயர்மட்ட அலுவலர்கள் சந்தித்து, மாநிலத்தில் அவர்களின் தொழில் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விவாதித்தனர். முதலமைச்சர் ராம்கோ குழுமத்தின் பங்களிப்பைப் பாராட்டினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் சென்னை தொழில் வர்த்தகக் கூட்டமைப்புக் (Madras Chamber of Commerce & Industries – MCCI) ஒரு சந்திப்பு
தமிழ்நாடு முதலமைச்சர், வணிகச் செயல்முறைகளை எளிதாக்குவது மற்றும் மாநிலத்தில் தொழில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது குறித்து விவாதிக்க MCCI உயர்மட்டக் குழுவினரை சந்தித்தார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகருமான திரு. கே. ராஜன் அவர்களின் மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் இரங்கல் செய்தி
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய், மூத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் திரு. கே. ராஜன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய் அவர்களுடன் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறைக் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) சந்திப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (18.05.2026) தலைமைச் செயலகத்தில், இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Indian Chambers of Commerce and Industry – FICCI) பிரதிநிதிகள் குழுவினர் சந்தித்துப் பேசினார்கள்.
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு
மே 2026 மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டத்தினை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுகிறது.
மருத்துவப் படிப்புகளில் நீட் (NEET) அடிப்படையிலான சேர்க்கைகளை ரத்து செய்யவும், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாநிலங்களே நிரப்ப அனுமதிக்க, ஒன்றிய அரசை வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் அறிக்கை,
நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதையும், மருத்துவ இடங்களை மாநிலங்களே 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நிரப்ப அனுமதிப்பதையும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஒன்றிய அரசுக்கு அறிக்கை விடுத்துள்ளார். நீட்-யு.ஜி 2026 வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டதையும், இத்தேர்வு பின்தங்கிய மாணவர்களைப் பாதிப்பதையும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஒட்டுநர் திரு.ரா.செந்தில், மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த Xylo நான்கு சக்கர வாகன ஓட்டுநர் திரு.ர.ராம், திரு.நரசிம்மன், திருமதி.ந.சாந்தாலட்சுமி, திரு.ந.பாலாஜி ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ஐந்து நபர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆறுதல் மற்றும் தலா மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி அறிவிப்பு.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் நன்றி தெரிவித்து ஆற்றிய உரை
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தனது அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின்னர் உரையாற்றினார், அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன், மக்கள் நலன் சார்ந்த, நீதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நிர்வாகத்திற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, கரூர்-கோயம்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், குறுக்கத்தி செக்போஸ்ட் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலர் திரு.ப.இரவிச்சந்திரன்அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்த வெள்ளக்கோவில் காவல் நிலைய காவலர் திரு.ப.இரவிச்சந்திரன் குடும்பத்தினருக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் முப்பது இலட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, குடிநீர் வழங்கல் மற்றும் கோடைக்கால குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை செயல்பாடுகள் மற்றும் கோடைக்கால குடிநீர் விநியோகம் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.