TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Launch

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Launch குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

23 அக்., 2026PR #912

"2026-27 ஆம் ஆண்டிற்கான கல்லூரிக் களப்பயணம்" தொடக்க விழா.

"கல்லூரிக் களப்பயணம் 2026–2027" திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழா இன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் 500 அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

12 ஆக., 2026PR #527

மாண்புமிகு அமைச்சர் ப. ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையவழி ஒதுக்கீட்டு தளத்தை துவக்கி வைத்தார்

மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை துவக்கி வைத்தார். பல்வேறு திட்டங்களில் உள்ள 7,659 அலகுகள் குலுக்கல், முதலில் வருவோருக்கு முன்னுரிமை, பொது ஒதுக்கீடு முறைகளில் விற்பனைக்கு உள்ளன. மேலும், 884 வணிக அலகுகள் மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.