மாண்புமிகு அமைச்சர் ப. ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையவழி ஒதுக்கீட்டு தளத்தை துவக்கி வைத்தார்
மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை துவக்கி வைத்தார். பல்வேறு திட்டங்களில் உள்ள 7,659 அலகுகள் குலுக்கல், முதலில் வருவோருக்கு முன்னுரிமை, பொது ஒதுக்கீடு முறைகளில் விற்பனைக்கு உள்ளன. மேலும், 884 வணிக அலகுகள் மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.
விரிவான சுருக்கம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி, மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனைத் தளத்தை இன்று (12.08.2026) சென்னை, நாமக்கல் கவிஞர் மாளிகை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூட்ட அரங்கில் துவக்கி வைத்தார்கள். கடந்த ஆண்டு 2630 அலகுகள் மட்டும் மின்னணு முறையில் விற்பனை செய்யப்பட்டது. தற்பொழுது, இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் பல்வேறு திட்டங்களில் விற்பனைக்கு உள்ள 7,659 அலகுகளில் 1) 21.08.2026 முதல் குலுக்கல் முறையில் 2,842 அலகுகளுக்கும், 2) 24.08.2026 முதல் முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமை அடிப்படையில் (FCFS) இடஒதுக்கீடு விகிதாச்சார முறையில் 2,184 அலகுகளுக்கும், 3) 25.08.2026 முதல் பொது ஒதுக்கீடு முறையில் (Common Pool) இட ஒதுக்கீடு விகிதாச்சாரமின்றி, முதலில் வருவோருக்கு முதலில் முன்னுரிமையில் 1,749 அலகுகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக Tamil Nadu Housing Board Online Portal-இல் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இணையதளத்தில் உள்நுழைவு செய்வதற்கான பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல், விருப்பமான அலகினை தெரிவு செய்தல், ஆவணங்களை தயார் நிலையில் வைத்தல், முன்பதிவு செய்வதற்கான கட்டண தொகையினை செலுத்துவதற்கு வங்கி பணப் பரிவர்த்தனை வரம்பினை நிர்ணயம் செய்தல், நிபந்தனைகளை கடைப்பிடித்தல் போன்றவற்றை தயார் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விற்பனைக்கு தயாராக உள்ள 884 வணிக அலகுகள் (கடைகள் / பிரதான வணிக மனைகள் மற்றும் பொது உபயோக மனைகள்) e-Tender cum e-Auction முறையில் 25.08.2026 முதல் 24.09.2026 வரை மின் ஏலத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தளம் Tamil Nadu e-Tenders Portal ஆகும். இந்த செயல்பாடு, பொதுமக்களுக்கு வீடு மற்றும் மனைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை பெருமளவில் அதிகரிப்பதுடன், வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்யப்படுகின்றது. மேலும் விற்பனைக்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு இவ்வாண்டில் விலை உயர்வு ஏதும் செய்யாமல் விற்பனை செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அரசு முதன்மைச் செயலாளர், திரு. இரா.கிர்லோஷ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர், திரு. வே.சிவா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குநர், திரு. சு.பிரபாகர், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை துவக்கி வைத்தல்.
- 27,659 அலகுகள் குலுக்கல், முதலில் வருவோருக்கு முன்னுரிமை, பொது ஒதுக்கீடு முறைகளில் விற்பனைக்கு உள்ளன.
- 3884 வணிக அலகுகள் e-Tender cum e-Auction முறையில் விற்பனை செய்யப்பட உள்ளன.
- 4அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விலை உயர்வு இல்லை.
- 5விற்பனை செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.