"2026-27 ஆம் ஆண்டிற்கான கல்லூரிக் களப்பயணம்" தொடக்க விழா.
"கல்லூரிக் களப்பயணம் 2026–2027" திட்டத்தின் மாநில அளவிலான தொடக்க விழா இன்று சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இத்திட்டத்தை மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் 500 அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
விரிவான சுருக்கம்
உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்லூரிச் சூழலை நேரடியாக அறிமுகப்படுத்துதல், மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறனுக்கு ஏற்ற உயர்கல்விப் பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 2026–2027 கல்வியாண்டில் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சிறப்புக் கவனம் தேவைப்படும் 1,47,631 மாணவர்கள், உயர்கல்வித் துறையின் ஒத்துழைப்புடன் 741 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர். மாண்புமிகு. பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள் கல்லூரிக் களப்பயண தொடக்க விழாப் பேருரையில், இக்களப்பயணத்தின் வாயிலாக மாணவர்கள் கல்லூரிகளின் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், பாடப்பிரிவுகள், மாணவர் சேர்க்கை நடைமுறைகள் மற்றும் சேர்க்கைக்கான தகுதிகள் குறித்து நேரடியாக அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது என்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு இத்திட்டத்தில் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்றும் கூறினார். மேலும், இதன் வாயிலாக உயர்கல்வி குறித்த அச்சம் மற்றும் தயக்கங்களைத் தவிர்த்து, தன்னம்பிக்கையோடு உயர்கல்வியை தொடர வேண்டும் என்று மாணவர்களை ஊக்குவித்தார். மேலும், இவ்விழாவில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, பள்ளிக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) திருமதி என். லதா, மாதிரிப் பள்ளிகளின் உறுப்பினர் செயலர் திரு. இரா. சுதன், இ.ஆ.ப., ( ஓய்வு ) மற்றும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் டாக்டர் வெ. குமரேசன், அனைவரும் கல்லூரிக் களப்பயணம் சார்ந்தும், உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் மாணவர்களிடையே எடுத்துரைத்தனர்.
முக்கிய அறிவிப்புகள்
- 1கல்லூரிக் களப்பயணம் 2026–2027 திட்டம் தொடங்கப்பட்டது.
- 2தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் இருந்து 1,47,631 மாணவர்கள் 741 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
- 3இத்திட்டம் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு வழிகாட்டவும் நோக்கமாகக் கொண்டுள்ளது.