TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அரசு முயற்சி / நீர் மேலாண்மை

மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை 27.07.2026 அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் (27.07.2026) திங்கட்கிழமை அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கவுள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு ஆய்வில் மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.

விரிவான சுருக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களின் உத்தரவுப்படி சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் திரு. என். ஆனந்த் அவர்கள் (27.07.2026) திங்கட்கிழமை அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கவுள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு ஆய்வில் மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன. இதற்காகத் துறை ரீதியாகத் தேவையான அனைத்துத் தொழில்நுட்ப மற்றும் கள ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், இப்பணியில் பெரு நிறுவனங்களும், தன்னார்வலர்களும் கலந்து கொண்டு தங்களது சமூக பங்களிப்பினை உறுதி செய்யவுள்ளனர். சென்னையில் கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு போன்ற ஆறுகளும், பக்கிங்காம் கால்வாய், ஒக்கியம் மடுவு போன்ற வடிகால்களும், வேளச்சேரி ஏரி, புழல் ஏரி, நாராயணபுரம் ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி போன்ற ஏரிகளும் அடையாறு, கூவம் மற்றும் முட்டுக்காடு போன்ற முகத்துவாரங்களும் உள்ளன. சென்னையில் 60 KM நீளத்திற்கு ஆறுகளும், 54 KM நீளத்திற்கு கால்வாய்களும் மற்றும் 3700 ஹெக்டேர் பரப்பளவிற்கு ஏரிகளும் அமைந்துள்ளன. இவற்றை முறையாக தூர்வாரி பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் பெரு நிறுவனப் பங்களிப்பு மற்றும் தன்னார்வலர்களின் பங்கேற்புடன் நீர்வளத்துறையால் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டமிடப்பட்ட கள ஆய்வின் முதல் நாளான திங்கள்கிழமை (27.07.2026) அன்று, கோயம்பேடு அருகிலுள்ள கூவம் நதிப் பகுதி மற்றும் சோழிங்கநல்லூர் வட்டம், ஒக்கியம் துரைப்பாக்கம் கிராமத்திலுள்ள ஒக்கியம் மடுவு ஆகிய இடங்கள், இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை (28.07.2026) அன்று, மணப்பாக்கம் அருகிலுள்ள அடையாறு நதிப் பகுதி மற்றும் சோழிங்கநல்லூர் அக்கரை பாலம் அருகிலுள்ள தெற்கு பக்கிங்காம் கால்வாய் ஆகிய இடங்கள், மூன்றாம் நாளான புதன்கிழமை (29.07.2026) அன்று வேளச்சேரி ஏரி மற்றும் நாராயணபுரம் ஏரி ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்து களப்பணியை மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு என். ஆனந்த் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்கள். இந்நிகழ்வில், சட்டமன்ற உறுப்பினர்கள், நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் சத்யபிரத சாகு இ.ஆ.ப., நீர்வளத்துறை பொறியாளர்கள், பெருநிறுவனங்களின் பிரதிநிதிகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    அமைச்சர் என். ஆனந்த் அவர்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகளை 27.07.2026 அன்று கள ஆய்வு செய்து தொடங்கி வைக்கிறார்.
  • 2
    மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு ஆய்வில் மொத்தம் ஆறு முக்கிய இடங்களில் நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணிகள் தொடங்கி வைக்கப்படவுள்ளன.
  • 3
    இப்பணிகளை பருவமழைக்கு முன்பாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளுடன் தொடர்புடையது

அரசு செய்திக் குறிப்புகளை தேர்தல் வாக்குறுதிகளுடன் ஒப்பிடும் NammaMap Manifesto AI-ல் கண்காணிக்கப்படுகிறது.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்