TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Natural Resources

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Natural Resources குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

12 ஜூன், 2026PR #224

அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பணிகள் மற்றும் மாவட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் பல்வேறு பணிகள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும், மாவட்ட அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்தும் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே.பிரபு அவர்கள் இன்று (12.06.2026) சென்னை, புவியியல் மற்றும் சுரங்கத்துறை, ஆணையரகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

11 ஜூன், 2026PR #215

கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத் தன்மையுடன் பணிகள் நடைபெறுவதை உறுதிசெய்யவும், அவர்களின் நடைமுறை சிக்கல்களையும் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறையால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்டுமான பொருட்கள் உரிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வது குறித்தும் கருத்துக்கள் பெற பல்வேறு சங்கப் பிரதிநிதிகளோடு மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு அவர்கள் ஆய்வு

இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டி.கே.பிரபு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல், கட்டுமான பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கச் செய்தல், சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் மற்றும் கனிம கடத்தலைத் தடுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

4 ஜூன், 2026

இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (4.6.2026) தலைமைச் செயலகத்தில், இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

26 மே, 2026

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் உத்தரவு

விருதுநகர் மாவட்டத்தில் விதிமீறல்களுடன் செயல்பட்டு வந்த 23 கல்குவாரிகளை தற்காலிகமாக நிறுத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு உத்தரவிட்டார். மொத்தம் 76 குவாரிகள் ஆளில்லா விமானம் மூலம் அளவீடு செய்யப்பட்டு அறிக்கை பெறப்பட்டது.

22 மே, 2026

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் சோதனை நடத்த மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு அவர்கள் உத்தரவு.

தமிழகம் முழுவதும் உள்ள கல்குவாரிகளில் அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்படுவதாகவும், பல இடங்களில் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும் புகார்கள் எழுந்த நிலையில், அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர்.டிகே. பிரபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.