TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

குறிச்சொல் செய்திகள்

#Online Portal

தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Online Portal குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.

12 ஆக., 2026PR #527

மாண்புமிகு அமைச்சர் ப. ராஜ்குமார் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் இணையவழி ஒதுக்கீட்டு தளத்தை துவக்கி வைத்தார்

மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ப. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் விற்பனைக்குரிய வீடு / மனைகளை இணையதளம் (Online Allotment Portal) மூலமாக விற்பனை செய்திட இணையவழி விற்பனை தளத்தை துவக்கி வைத்தார். பல்வேறு திட்டங்களில் உள்ள 7,659 அலகுகள் குலுக்கல், முதலில் வருவோருக்கு முன்னுரிமை, பொது ஒதுக்கீடு முறைகளில் விற்பனைக்கு உள்ளன. மேலும், 884 வணிக அலகுகள் மின் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

17 ஜூலை, 2026PR #418

பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம் (Public Grievance Portal) - தணிக்கைத் துறை தொடர்பான மக்களின் குறைகள் உடனுக்குடன் தீர்வு செய்யும் புதிய தளம் உருவாக்கப்பட்டது – தொடர்பாக

தணிக்கைத் துறை தொடர்பான பொதுமக்கள் மற்றும் தணிக்கை மேற்கொள்ளப்படும் நிறுவனங்களின் குறைகளை எளிதாக தீர்க்கவும், தேவையான விவரங்களை உடனுக்குடன் பெறவும், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தவும், வசதிகளை அதிகரிக்கவும் CAMS வலைதளத்தின் ஒரு பகுதியாக புதிய பொதுமக்கள் குறைதீர்த்திடும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.