குறிச்சொல் செய்திகள்
#Permits
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Permits குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
22 செப்., 2026PR #719
மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகத்தில், கனிமவளத் துறை சார்ந்த பல்வேறு சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் தலைமையில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு, சட்டபூர்வமாகவும், நியாயமாகவும் தொழில் செய்து, அரசுக்கு வருவாய் இழப்பை தடுத்து, பொது மக்களுக்கு தரமான கட்டுமானப் பொருட்கள் உகந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டது.