TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

கனிம வள மேலாண்மை

மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநரகத்தில், கனிமவளத் துறை சார்ந்த பல்வேறு சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் தலைமையில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டு, சட்டபூர்வமாகவும், நியாயமாகவும் தொழில் செய்து, அரசுக்கு வருவாய் இழப்பை தடுத்து, பொது மக்களுக்கு தரமான கட்டுமானப் பொருட்கள் உகந்த விலையில் கிடைக்க வழிவகை செய்ய வலியுறுத்தப்பட்டது.

மாவட்டங்கள்சென்னை
முக்கிய நபர்கள்Dr. T.K. Prabhu, Chief Minister of Tamil Nadu

விரிவான சுருக்கம்

மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டாக்டர் டி.கே.பிரபு அவர்கள் தலைமையில், 22.09.2026 அன்று கிண்டியில் அமைந்துள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில் கல்குவாரி, கிரஷர் உரிமையாளர்கள் சங்கம், செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு லாரி மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் கனிவுடன் கேட்டறிந்தார். மாண்புமிகு தமிழக முதல்வரின் முதன்மை நோக்கங்களான, ஊழல் இல்லா நிர்வாகம், இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் அரசுக்கான வருவாய் இழப்பை தடுத்தல் ஆகியவைகளை விவரித்து, அதன்படி குவாரி குத்தகைதாரர்கள் சட்டபூர்வமாகவும், நியாயமாகவும் தொழில் செய்து பொது மக்கள் மற்றும் அரசு கட்டுமான பணிகளுக்கு தரமான கட்டுமான பொருட்கள் உகந்த விலையில் சந்தையில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். எளிமையான முறையில் குவாரி குத்தகை உரிமம் பெறவும், கல்குவாரி தொழிலை முறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார். நிலுவையில் உள்ள குவாரி குத்தகை விண்ணப்பங்கள் மற்றும் புதிய குவாரிகள் வழங்குவது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து குவாரி குத்தகை உரிமையாளர்களும் ஏற்பளிக்கப்பட்ட சுரங்க திட்டத்தில் தெரிவித்துள்ளவாறு 100 சதவீதம் கனிம இலக்கினை எய்தி அதற்குரிய உரிம தொகை மற்றும் இதர தொகைகளை அரசு கணக்கில் செலுத்தப்படவேண்டும் என அறிவுறுத்தினார். சட்ட விதிகளின்படி குவாரி பணி செய்து அரசுக்கு மிக அதிகமாக வருவாய் அளிக்கும் குவாரி உரிமைதாரர்களுக்கு சிறந்த செயல்பாட்டிற்கான விருது ஒவ்வொரு வருடமும் அரசின் மூலம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். செங்கல்சூளை உரிமையாளர்கள் சங்கப் பிரநிதிகளின் கோரிக்கையை ஏற்று, செங்கல் சூளைகளுக்குத் தேவையான மண் எடுப்பதற்கு விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கல்குவாரி உரிமையாளர்கள் மற்றும் செங்கல் சூளை உரிமையாளர்கள் உரிய விதிகளை பின்பற்றி பொது மக்கள் மற்றும் அரசு கட்டுமான பணிகளுக்கு தேவையான சாதாரண கற்கள், ஜல்லி, எம்-சாண்ட் மற்றும் செங்கல் ஆகியவற்றை உற்பத்தி செய்து அனைவருக்கும் உகந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு லாரி மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கப் பிரநிதிகளின் கலந்தாய்வு கூட்டத்தில், சாதாரண கற்கள், எம்-சாண்ட், கிராவல் மற்றும் மண் போன்ற கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முறையான Permit மற்றும் Transit pass கொண்டு செல்லவேண்டும் என்றும், MiMaS Portal-லுடன் இணைந்த QR-Code முறையில் மின்னணு நடைச்சீட்டுகள் (e-transport/ e-transit passes) விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களிலும் 30.09.2026-குள் GPS கருவி கட்டாயமாக பொருத்தி அதனை MiMaS தளத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும் என அனைத்து சங்க பிரதிநிதிகளிடமும் அமைச்சர் வலியுறுத்தினார்.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    எளிமையான முறையில் குவாரி குத்தகை உரிமம் பெறவும், கல்குவாரி தொழிலை முறைப்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • 2
    நிலுவையில் உள்ள குவாரி குத்தகை விண்ணப்பங்கள் மற்றும் புதிய குவாரிகள் வழங்குவது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளுக்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.
  • 3
    அனைத்து குவாரி குத்தகை உரிமையாளர்களும் ஏற்பளிக்கப்பட்ட சுரங்க திட்டத்தில் தெரிவித்துள்ளவாறு 100 சதவீதம் கனிம இலக்கினை எய்தி அதற்குரிய உரிம தொகை மற்றும் இதர தொகைகளை அரசு கணக்கில் செலுத்தப்படவேண்டும்.
  • 4
    சட்ட விதிகளின்படி குவாரி பணி செய்து அரசுக்கு மிக அதிகமாக வருவாய் அளிக்கும் குவாரி உரிமைதாரர்களுக்கு சிறந்த செயல்பாட்டிற்கான விருது ஒவ்வொரு வருடமும் அரசின் மூலம் வழங்கப்படும்.
  • 5
    செங்கல் சூளைகளுக்குத் தேவையான மண் எடுப்பதற்கு விதிமுறைகள் மறுஆய்வு செய்யப்படும்.
  • 6
    கனிமங்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் முறையான Permit மற்றும் Transit pass கொண்டு செல்லவேண்டும்.
  • 7
    MiMaS Portal-லுடன் இணைந்த QR-Code முறையில் மின்னணு நடைச்சீட்டுகள் (e-transport/ e-transit passes) விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 8
    உயர்நீதிமன்ற உத்தரவின்படி அனைத்து கனிமம் ஏற்றிச்செல்லும் வாகனங்களிலும் 30.09.2026-குள் GPS கருவி கட்டாயமாக பொருத்தி அதனை MiMaS தளத்துடன் ஒருங்கிணைக்க வேண்டும்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்