#Public Distribution
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Public Distribution குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
அமைச்சர் ப.வெங்கடரமணன் சென்னை அமுதம் பல்பொருள் அங்காடியில் திடீர் ஆய்வு
உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், சென்னை ராமாபுரம் - மணப்பாக்கம் பகுதியில் உள்ள அமுதம் பல்பொருள் அங்காடியில் இருப்பு, தரம், பராமரிப்பு மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொருட்கள் உரிய எடையிலும், தரமாகவும் வழங்கப்படுவதையும், விற்பனை ரசீது கட்டாயம் வழங்கப்படுவதையும் உறுதி செய்ய அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சரை சந்தித்தார்
தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன் அவர்கள் புதுதில்லியில் ஒன்றிய அமைச்சர் திரு. பிரகலாத் ஜோஷி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பை வலுப்படுத்துதல், கொள்முதல் மற்றும் விநியோக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.