TN

TN SHORTS

செய்தி வெளியீடுகள்

அத்தியாவசியப் பொருட்கள்

சென்னை மாவட்டத்தில் சன்னரக அரிசி கூட்டுறவு விற்பனை நிலைய முகவரி மற்றும் குறைதீர்விற்கான பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு, சன்னரக அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30/-க்கு சன்னரக அரிசி விற்பனையை 17.10.2026 அன்று சென்னையில் 19 இடங்களில் தொடங்கியது. மேலும், குறைதீர்விற்காக 9884000845 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விரிவான சுருக்கம்

தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி நியாயமான விலையில் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சன்னரக அரசியின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30/- என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை 17.10.2026 அன்று சென்னையில் முதற்கட்டமாக 19 இடங்களில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இத்திட்டத்திற்காக மொத்தம் 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 34 மாவட்டங்களில் செயல்படும் 204 கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு 584.908 மெட்ரிக் டன் சன்னரக அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. 21.10.2026 அன்றைய விற்பனை நிலவரப்படி, 16.456 மெட்ரிக் டன் சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 22.10.2026 அன்று ஒரே நாளில் மட்டுமே 12.953 மெட்ரிக் டன் அளவிற்கு சன்னரக அரிசி விற்பனை செய்யப்பட்டு மாநிலம் முழுவதும், மொத்தம் 29.409 மெட்ரிக் டன் விற்பனையாகி உள்ளது. குறிப்பாக சென்னை மாவட்டத்தில் கீழ்க்கண்டுள்ள விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேற்படி விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ சன்னரக அரிசி ரூ.30/-க்கும் மற்றும் தமிழக அரசின் அதிரடி விலை குறைப்பு நடவடிக்கையால் ஒரு கிலோ புழுங்கல் பொன்னி அரிசி ரூ.60/-க்கும், மளிகை பொருட்களான துவரம் பருப்பு ரூ.130/-க்கும், உளுத்தம் பருப்பு ரூ.140/-க்கும், பூண்டு ரூ.240/-க்கும், மல்லி(தனியா) ரூ.240/-க்கும், மிளகாய் ரூ.330/-க்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு சன்னரக அரிசி குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்வதுடன், அரிசி விலை உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையிலும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், பொதுமக்கள், விவசாயிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் துறை பணியாளர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மேலும் எளிதாகவும், விரைவாகவும் தலைமை அலுவலகத்திற்கு நேரடியாக தெரிவிக்கும் வகையில் பிரத்யேக வாட்ஸ்அப் (WhatsApp) எண்: 9884000845 என்ற கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண்ணாக (Official Grievance Redressal Number) தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்புகள்

  • 1
    அமுதம் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30/-க்கு சன்னரக அரிசி விற்பனை.
  • 2
    17.10.2026 அன்று சென்னையில் முதற்கட்டமாக 19 இடங்களில் விற்பனை தொடக்கம்.
  • 3
    மாநிலம் முழுவதும் இத்திட்டத்திற்காக 995 மெட்ரிக் டன் சன்னரக அரிசி ஒதுக்கீடு.
  • 4
    34 மாவட்டங்களில் செயல்படும் 204 கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு 584.908 மெட்ரிக் டன் சன்னரக அரிசி அனுப்பிவைப்பு.
  • 5
    புழுங்கல் பொன்னி அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, மல்லி(தனியா), மிளகாய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை.
  • 6
    கூட்டுறவுத் துறையின் அதிகாரப்பூர்வ குறைதீர்வு எண்ணாக 9884000845 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண் அறிமுகம்.

Archive navigation

தொடர்புடைய அறிவிப்புகள் & செய்திக் குறிப்புகள்