குறிச்சொல் செய்திகள்
#Sivaraj
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Sivaraj குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
29 செப்., 2026PR #753
சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப.வெங்கடரமணன், மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் ஆகியோர் இன்று (29.9.2026) சென்னை, தங்கசாலை, மணிக்கூண்டு அருகில் அமைந்துள்ள சென்னை முன்னாள் மேயர் சிவராஜ் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.