#Student Admission
தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட Student Admission குறிச்சொல் கொண்ட அனைத்து செய்திகள் மற்றும் அறிவிப்புகளை இங்கே காணுங்கள்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை செயல்படும் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் தகவல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவுகளுக்கான இரண்டாம் கட்ட மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப்பதிவு வசதி 07.09.2026 முதல் 15.09.2026 வரை செயல்படும்.
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நீட்டிப்பு.
அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 31/08/2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணாக்கர்கள் 10/09/2026 வரை இரண்டாம் கட்ட சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.
தொழிற்பயிற்சி நிலையங்களில் (ITI) மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
2026-2027 ஆம் ஆண்டு கலந்தாய்வுக்கான தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் 14.08.2026 அன்று நிறைவடைந்த நிலையில், மாணவர்களின் நலன் கருதி நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 31.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - 2026ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை – அறிவிப்பு
தமிழ்நாடு அரசு அங்கீகாரத்துடன், சென்னை, தரமணியில் இயங்கும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித்தொகையுடன் நடத்தப்படும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு (Five Years Integrated P.G. M.A. in Tamil) மற்றும் முதுகலைப் பட்டப் படிப்பு (M.A. Tamil) ஆகிய படிப்புகளுக்கான 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு.